வெளியானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் ட்ரைலர்...!!  

 
1

அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. கதை மற்றும் திரைக்கதையை ரஜினியே எழுதியிருந்தார்.  கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  

இந்த படத்தில் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் இந்த படம் மீண்டும் புதிய பொலிவுடன் வெளியாகவுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் தயாராகி வருகிறது. அதேபோன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்பை விட பார்ப்பதற்கு விறுவிறுப்பாக படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

1

இதையடுத்து இந்தப் படத்தை 20 ஆண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது, அது படி படத்தில் ரீ கலரிங் செய்து, பாடல்கள் மற்றும் பின்னணி இசை டால்பி முறையில் சவுண்ட் மிக்ஸிங் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. அதேபோல் எடிட்டிங்கிலும் மாற்றம் செய்யப்பட்டு, படத்தில் அப்போது எடிட்செய்யப்பட்டு நீக்கப்பட்ட   சில காட்சிகளும் சேர்க்கப் படும் என தகவல் வந்தது.

இந்த நிலையில் பாபா படத்திற்காக தலைவர் டப்பிங் செய்யும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் புது பொலிவோடு சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

From Around the web