திரையுலகினர் அஞ்சலி..!! நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை காலமானார்..!!
பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இதனை அடுத்து தெலுங்கு திரையுலகினர் நேரில் சென்று கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கிருஷ்ணாவுக்கு மகேஷ்பாபு உள்பட 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா கடந்த 1965-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா 350க்கும் மேற்பட்ட படங்களில் ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.