முதல் முறையாக வெப் சீரிஸில் களமிறங்கியுள்ள த்ரிஷா அதுவும் போலீஸ் கதாபாத்திரத்தில்..!! 

 
1

 முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Trisha

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் குந்தவை கேரக்டருக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். 

இவரது நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் சதுரங்க வேட்டை-2 திரைப்படம் நிறைவடைந்தது நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன்-2 திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக தமிழில் த்ரில்லர் படமாக தயாராகும் தி ரோட் மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடிக்கும் ராம் ஆகிய திரைப்படங்கள் த்ரிஷா நடிப்பில் தயாராகி வருகின்றன. இதனிடையே முதல் முறை வெப்சீரிஸில் களமிறங்கியுள்ள த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடிக்க, தெலுங்கில் தயாராகி வரும் வெப் சீரிஸ் பிருந்தா. 


இயக்குநர் சூர்யா வங்களா இயக்கத்தில் உருவாகும் பிருந்தா வெப்சீரிஸை அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தினேஷ்.K.பாபு ஒளிப்பதிவு செய்யும் பிருந்தா வெப் சீரிஸ்க்கு சக்தி காந்த் கார்த்திக் இசையமைக்கிறார். விரைவில் சோனி லைவ் தளத்தில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது பிருந்தா வெப் சீரிஸின் பாடப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள த்ரிஷா வெப்சீரிஸின் முதல் சீசன் விரைவில் வெளிவர தயாராகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

From Around the web