தி லெஜண்ட் சரவணன் போட்ட டக்கர் ட்வீட்..!

சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படம் வெளியான நாளில் இருந்து அப்படம் குறித்தும் சரவணன் அருள் குறித்தும் நிறைய விமர்சனங்கள் அடுக்கடுக்காய் படையெடுத்து வருகிறது.
இதற்கிடையே இவை எதையும் கண்டுக்காமல் சரவணன் அருள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் “அமோக வரவேற்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று கூலாக ட்வீட் போட்டுள்ளார் . மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.
Candid moments from the #TheLegend Press Conference happened at Cochin.
— Legend Saravanan (@yoursthelegend) August 2, 2022
Thank you everyone for the overwhelming response.#TheLegendRunningSuccessfully pic.twitter.com/PykQOAuKDm