இடைவேளை இல்லாத நயன்தாரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'மாயா'. இந்த படத்தன் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் உருவாகும் ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’ இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Come let’s #Connect in cinemas !
— Nayanthara✨ (@NayantharaU) November 30, 2022
In theatres from 22.12.22 worldwide
A film without interval🎥
99 minutes of complete Horror-Entertianment at one Go😌
Certified U/A pic.twitter.com/hd92EspOKu
இந்நிலையில் இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக கனெக்ட் படம் ரிலீஸாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து 99 நிமிடங்கள் ஓடக்கூடிய மிரட்டலான ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் நயன்தாராவின் கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இடைவேளை இல்லாத ஹாரர் பாடமாக ரிலீஸ் ஆகும் கனெக்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.