கலகத்தலைவனாக மாறிய உதயநிதி ஸ்டாலின்..!! 

 
1

நெஞ்சுக்குநீதி திரைப்படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். மாரி செல்வராஜ் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வரிசையில் அடுத்ததாக முன்னணி இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக முன்பே அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியானது. கலகத்தலைவன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் கலகத்தலைவன் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேலி இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில் கலகத்தலைவன் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


 

From Around the web