ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து உதயநிதி பெயர் நீக்கம்..!! 

 
1

சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இனிவரும் காலங்களில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகி விட்டதாக கூறியிருந்தார். 

நடிகராக இருந்த உதயநிதி, தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவரது தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் ,உதயநிதி வழங்கும்' என குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் அந்த வாசகத்தை நீக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இனி வெளியிடப்படும் திரைப்படங்களில் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்கும்' என்று குறிப்பிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

1

From Around the web