பட்டையை கிளப்பும் மல்லிப்பூ பாடலின் அன்சீன் வீடியோ!

 
1

விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி அமைந்துள்ள படம் வெந்து தணித்தது காடு.இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி கொடுத்துள்ளார்.

படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெல்லையில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்கிற இளைஞர் பிழைப்புக்காக மும்பை சென்று அங்குபடும் இன்னல்களும் பின்னர் அவரே மிகப்பெரிய கேங்ஸ்டாராக உருவெடுப்பதையும் கதைக்களமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. 

தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தாலும், மல்லிப்பூ பாடல் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் மல்லிப்பூ பாடலின் இதுவரை வெளிவராத புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை நடன இயக்குனர் பிருந்தா வெளியிட்டுள்ளார்.


 

From Around the web