இந்த கணம் வரை நான் சாகல... கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா!!

 
1

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார்.

தற்போது சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.

Samantha

இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன் காரணமாக தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாக தெரிவித்த அவர்,  விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளிவர உள்ள யசோதா படத்தின் புரமோஷன் வருகிற 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு புதிய பதிவை மேற்கொண்டு இருக்கிறார்.


 அதில், “சில தினங்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிற நிலையில் நான் உடல்நிலை உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த கணம் வரை நான் சாகாமல் உயிருடன்தான் இருக்கிறேன். நான் சாகாமல் தான் இருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

From Around the web