மீண்டும் தியேட்டரில் மகிழ்விக்க வருகிறார் வடிவேலு..!! எப்போ தெரியுமா ?

 
1

தலைநகரம், மருதமலை, படிக்காதவன் ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் தற்போது வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், படத்தை வரும் டிசம்பரில் ரிலீஸ் செய்வதற்கான இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மொத்தம் 2 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதலில் இந்த திரைப்படத்தை நவம்பர் மாதம், அதாவது இந்த மாதமே வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால் சில பல காரணங்களால் படத்தை நவம்பர் மாதத்தில் வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் தற்போது படத்தை வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

படத்திற்கு சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் கிடைத்தவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

From Around the web