சிரஞ்சீவியின் ‘கேங் லீடர்’ படத்தில் வில்லனாக நடித்த வல்லபனேனி ஜனார்தன் காலமானார்..!! 

 
1

1959-ல் பிறந்த வல்லபனேனி ஜனார்தன், தனது முதல் படமான ‘மம்மா கேரி மணவாலு’ நிதி பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கன்னடப் வெளியான மானச சரோவரம் படத்தின் ரீமேக்கான ‘அமயக சக்ரவர்த்தி’ மூலம் பெரும் வெற்றியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீமதி கவாலி, பரிபோயின கைதிலு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

Vallabhaneni Janardhan

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். சிரஞ்சீவியுடன் ‘லக்ஷ்மிநரசிம்மா’, பாலகிருஷ்ணாவுடன் ‘வரசுடு’, வெங்கடேசுடன் ‘சூர்யா ஐபிஎஸ்’ என பல படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றார். தனது கேரியரின் முடிவில் ‘அன்வேஷிதா’ சீரியலிலும் நடித்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரை குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 29-ம் தேதி காலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP

பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய பாபிநீடுவின் மூன்று மகள் லாலினி சவுத்ரியை வல்லபனேனி ஜனார்தன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களில் ஒருவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார், மற்றொரு மகள் அபிநயா ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். மகன் அவினாஷ் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

From Around the web