‘வெண்ணிலா கபடிக் குழு’ புகழ் நடிகர் திடீர் மரணம்..!

 
111

சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சுந்தர். அதனைத் தொடர்ந்து தனது பெயருடன் ‘மாயி’ என்று சேர்த்து கொண்ட இவர் மாயி சுந்தர் என்று அழைக்கப்பட்டார்.

VKK

அதனைத் தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, ஸ்கெட்ச், குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், நடிகர் மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

RIP

இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

From Around the web