வரலட்சுமிக்கும் எனக்கும் காதலா ..? முதல் முறையாக மனம் திறந்த நடிகர் விஷால் 

 
1

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதல் செய்துவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால், இந்த விஷயம் குறித்து வரலட்சுமியும், நடிகர் விஷாலும் எந்த ஒரு பேட்டிகளிலும் பேசியது கூட இல்லை. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஷால் இது குறித்து தெளிவாக மனம் திறந்து பேசி வதந்தி தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய விஷால் ” வரலட்சுமி சரத்குமார் எனக்கு சிறிய வயதில் இருந்தே நல்ல தோழி. ரொம்ப நெருக்கமான தோழி. அவரையும் என்னையும் பற்றி நிறைய வதந்தி தகவல் வந்தது. நானும் அதைப்பார்த்தேன். சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்கள், நடிகைகள் குறித்தும் இப்படி ஒரு வதந்தி தகவல்கள் பரவுவது வழக்கம் தான்.

நான் இதைப்பற்றி விளக்கம் கொடுத்தாலும் அவர் அவர்களுக்கு தோன்றுவதை தான் எழுதுவார்கள். எனவே இதை பற்றி நான் பேசவிரும்பவில்லை” என கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web