இந்த வருடம் வாத்தி படம் ரிலீஸ் இல்லையாம்..!!
‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை 'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பணிகள் முடிவடையாத நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.