விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘வெந்து தணிந்தது காடு’... ரசிகர்கள் அதிர்ச்சி..!! 

 
1

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை அடுத்து சிம்பு  கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.இந்தப் படத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஐசரி கணேஷ் சார்பாக வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் 24 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

1

இமேலும் இந்தப் படத்தில் தாமரை எழுதிய பாடல் வரிகளில், மதுஸ்ரீ குரலில் வெளியான மல்லிப்பூ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்தப் பாடலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருவதுடன், ரீல்ஸ் செய்தும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web