வைரலாகும் வடிவேலு பாடிய சிங் இன் தி ரெயின் வீடியோ..!!
Mon, 18 Apr 2022

2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மனதை திருடிவிட்டாய்’. பிரபுதேவா நடித்த இந்த படத்தில் வடிவேலு காமெடி இன்றளவில் அனைவராலும் ரசிக்கப்படுபவை..
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி ஒன்றை வடிவேலு நடித்து காட்ட, அதை அருகில் நின்று பிரபுதேவா ரசிக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பிரபுதேவா பதிவு செய்துள்ளார். ‘நட்பு’ என்ற கேப்ஷனுடன் பதிவாகியுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. கடந்த கால நினைவுகளை பகிரும் வகையிலான இந்த வீடியோவை இணையவாசிகள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
Natpu ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/BCVJRixz9S
— Prabhudheva (@PDdancing) April 17, 2022