நடிகர் தனுஷ் குறித்து நடிகை கரீனா கபூர் பேசியுள்ள வீடியோ வைரல்..!!  

 
1

தமிழில் பிரபல நடிகரன தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இந்திய அளவில் பிரபல நடிகராக உருவெடுத்தார். 

அதையடுத்து Extraordinary Journey of Fahir படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகமானார். தற்போது அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி க்ரே மேன் படத்தில் நடித்து இன்டெர்நேஷனல் நடிகராக உருவெடுத்துள்ளார்.

1

நடிகர் தனுஷ் தனது அப்பா ஒரு இயக்குனர் என்பதால் எளிதாக திரைத்துறையில் நுழைந்துவிட்டார். ஆனால் அவர் சினிமாவில் வளர அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணமாக அமைந்தது. தனுஷின் நடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தி அவரை இந்தளவிற்கு வெற்றி பெறச் செய்ததில் மிக முக்கியப் பங்கு இயக்குனர் செல்வராகவனுக்கு உண்டு.தனுஷ் தற்போது இந்திய அளவில் ரசிகர்களை பெற்றுள்ள நடிகராக உயர்ந்துள்ளார். பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கலந்துகொண்டா நேர்காணலில் தனுஷின் நடிப்பை புகழ்ந்துள்ளார். 

"தனுஷ் மிகச் சிறந்த நடிகர். அவரை எந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் வேற லெவலில் நடிக்கிறார்." என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

From Around the web