வைரலாகும் விக்னேஷ் சிவன் - நயன் திருமண பத்திரிக்கை..!!
May 29, 2022, 06:05 IST

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என தகவல் கசிந்தது. ஆனால் தற்போது திருமணம் எங்கு நடைபெறவுள்ளது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டுள்ளது.சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமாத்துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.