விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண விருந்து .. அடடே செம மெனு இதோ..!!

 
1

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரின் 7 வருட காதலன் விக்னேஷ் சிவன்  திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை திருமணம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் நேரில் வந்து விக்கி - நயன் ஜோடியை வாழ்த்தினர்.

தற்போது விருந்து நடந்து வருகிறது. விருந்தில் சுத்தமான சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. இதோ அந்த உணவு வகைகள்.

 • பன்னிர் பட்டானிக்கறி
 • பருப்புக் கறி
 • அவியல்
 • மோர் குழம்பு
 • மிக்கன் செட்டிநாடு கறி
 • உருளை கார மசாலா
 • வாளைக்காய் வருவல்
 • சென்னா கிழங்கு வருவல்
 • சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
 • காளான் மிளகு வறுவல்
 • கேரட் பொரியல்
 • பீன்ஸ் பொரியல்
 • காய் பொரிச்சது
 • பொன்னி ரைஸ்
 • பலாப் பழம் பிரியாணி
 • சாம்பார் சாதம்
 • தயிர் சாதம்
 • பூண்டு மிளகு ரசம்
 • தயிர்
 • வெஜிடபுள் ரைதா
 • வடகம்
 • வத்தல்
 • அப்பளம்
 • ஏலக்காய் பால்
 • பாதாம் அல்வா
 • இளநீர் பாயாசம்
 • கேரட் ஐஸ் கிரீம்

நயன்தாரா திருமண நிகழ்வில் விவிஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சிலருடன் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. உள்ளே யாருக்கும் தொலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதனால் உள்ளே நடைபெறும் நிகழ்வுகளை காணமுடியாத நிலை உள்ளது. நயன்தாரா என்ன உடை அணிந்திருக்கிறார்; மணக்கோலத்தில் எவ்வாறு உள்ளார் என்கிற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தீவிர அசைவ விரும்பிகள் என்றாலும், இந்து முறைப்படி நடைபெறும் இந்த திருமணத்தில், சுத்த சைவ உணவுகளை தான் இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர். 

திருமணத்தை ஒட்டி இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 

From Around the web