செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய விக்னேஷ் சிவன்..!!

 
1

வருகிற ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், திருமணம் செய்ய உள்ளனர்.

இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், திருமண வரவேற்பு நிகழ்வில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VigneshShivan-Nayanthara

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் உணர்ச்சிவசப்பட்ட விக்னேஷ் சிவன் கண்கலங்கினார்.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுகையில், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களின்போது தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அதேபோல, தன்னுடைய அடுத்தகட்ட வாழ்க்கை நிகழ்வை நோக்கி நகர்கிறேன். வருகிற ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன். எப்போதும் போல் உங்களுடைய அன்பு எங்களுக்கு தேவை, திருமணம் முடிந்த பிறகு ஜூன் 11-ம் தேதி தானும் நயன்தாராவும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சில சிக்கல் காரணமாக மாமல்லபுரத்தில் குறிப்பிட்ட சில பேர் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து முறைப்படிதான் திருமணம் நடைபெறும் என்றார்.

From Around the web