வைரலாகும் விக்னேஷ் சிவனின் உருக்கமான இன்ஸ்டா பதிவு!!

 
1

2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ படத்திற்காக விஜய் டிவியில் பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை நயன்தாரா கொடுத்திருந்தார். அப்போது, உங்களுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போ திருமணம் என டிடி கேட்க, இருவருக்கும் நிச்சயம் ஆகிடுச்சு என்கிற ரகசியத்தை போட்டு உடைத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நயன்தாரா. போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டுக்கு குடிபோன உடனே திருமணம் நடக்கும் என பேச்சுவார்த்தைகள் கிளம்பின.

நயன்

நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “சீரடியில் இருந்து என் கண்மணியுடன் சாய்பாபாவை சந்திக்கும் நன்றியுணர்வு பயணம்” என பதிவிட்டுள்ளார்.

From Around the web