நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி..!!

 
1

தமிழ் நாடக உலகில் முன்னோடி கலைஞராக இருந்த சங்கரதாஸ் சுவாமிகள் 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். இவர் 1922 நவம்பர் 13 ஆம் தேதி புதுச்சேரியில் காலமானார். தனது 24ஆவது வயதில், தான் பார்த்து வந்த கணக்கர் வேலையை விட்டு விட்டு முழு நேரமாக நாடகத்துறையில் பணியாற்ற தொடங்கினார்.

தமிழில் மட்டும் இவர் 40 நாடக நூல்களை எழுதியுள்ளார். சங்கரதாஸின் மறைவைத் தொடர்ந்து, அவருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுகூரப்படுகிறார்.

இந்நிலையில், இன்று அவரது 100ஆவது நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நினைவு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பங்கேற்று, குத்தாட்டம் போட்டு மற்ற கலைஞர்களையும் உற்சாகப்படுத்தினார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 

From Around the web