விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுனை பின்னுக்கு தள்ளிய நடிகர் சூர்யா..!! 

 
1

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார்.  நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 - டிசம்பர் 2022 வரையில் 6 ஆயிரம் பேரிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார். மிகவும் அடையாளம் காணப்பட்டவர்கள் பட்டியலில் சூர்யா, தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார். மேலும் தமிழ் இண்டஸ்ட்ரியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை விட முன்னணியில் உள்ளார். 

Suriya Ranks Number 1 in Top South Celebs per IIHB's Report for 2023; Allu  Arjun, Dulquer Salmaan, Thalapathy Vijay Also Rank High in List | 🎥  LatestLY

கன்னட மற்றும் மலையாள சினிமாவில் முறையே யாஷ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணியில் உள்ளனர். தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகர் என்ற பட்டியலில் தெலுங்கு நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டாவை விட சூர்யா முன்னணியில் உள்ளார். தமிழில் விஜய் உள்ளார். துல்கர் சல்மான் மற்ற இரண்டு மாநிலங்களிலும் நம்பர்-1 ஆக உள்ளார். 

1

தென்னிந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய நட்சத்திரமாக சூர்யா முதலிடம் பிடித்தார். தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் முன்னிலையில் உள்ளனர். தமிழில் அஜித் மற்றும் சிவகார்த்திகேன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் யாஷ் முன்னணியில் உள்ளார் கிச்சா சுதீப் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

1

அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்சத்திரமாக உள்ளார்.

From Around the web