இணையத்தை அதிரவிடும் விஜய் ராஷ்மிகா ஷூட்டிங் ஸ்பாட் செல்பி...!!

 
1

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் .இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம், குஷ்பு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார். ‘வாரிசு’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் இருந்து ராஷ்மிகா விஜயுடன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.செம ஸ்மார்ட்டாக விஜய் இருக்கும்  இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

From Around the web