டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஜய் சேதுபதி நித்யா மேனன் திரைப்படம்..!!  

 
1

பிரபல நடிகை நித்யா மேனன் தென்னிந்தியா சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர். தற்போது அவர் 19 (1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த  படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆண்டோ ஜோசப் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது வெளியாகத் தயாராக உள்ளது. தற்போது இந்தப் படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போன்று வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

From Around the web