விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்... தேசிய விருது கட்டாயம் - இயக்குனர் ஷங்கர் 

 
1

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஷங்கர் ஜோடி மீண்டும் இணைந்துள்ள படம் மாமனிதன்... இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார் .ராதா கிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவராகவும், தன் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் ஒரு கடமையான தந்தையாகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களை அடுத்து இந்தக் கூட்டணி நான்காவது முறையாக 'மாமனிதன்' படத்திற்காக இணைந்துள்ளனர். 

ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல்களுக்கான வரிகளை பா விஜய் மற்றும் கருணாகரன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணைந்து இசையமைத்து வரும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஷாஜி சென், கேபிசி லலிதா, ஜூவல் மேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தை பார்த்தவர்கள் சமுக வலைத்தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர் .யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மாமனிதன் திரைப்படத்தை பார்த்து ரசித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமனிதன் திரைப்படம் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த மனநிறைவை கொடுத்துள்ளது… இயக்குனர் சீனு ராமசாமி தன்னை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்து சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்… விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! தேசிய விருது கட்டாயம் கிடைக்கும்… இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் ஆத்மார்த்தமாக இருந்தது…” என தெரிவித்துள்ளார். 


 

From Around the web