த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி..!!
புதுமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் என்பவரின் இயக்கத்தில் கிரைம் த்ரில்லராக தயாராகி வரும் திரைப்படம் அஜினோமோட்டோ.ஆர்.எஸ்.கார்த்திக் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடிக்கிறார்.கே.கங்காதரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் நிலையில், டி.எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மோஷன் போஸ்டரும் விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
Happy to launch the motion poster and first look of #AjinoMoto
— VijaySethupathi (@VijaySethuOffl) October 6, 2022
Congrats team. #AjinoMotoFirstLook @KarthiikPK @GayatriRema @Dir_Mathirajoff @Music_UdhayDM @Dattatreyone @catcharadya @Gangadarandop @MSSRINATH3 @ShivaDattatrey @MrTamilSelva @ProSrivenkatesh pic.twitter.com/5D1yYy6zc6