முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் பிரபல சீரியல் ..?எந்த சீரியல் தெரியுமா ..?
Sep 20, 2022, 10:05 IST
மக்களை மிகவும் கவர்ந்த தொலைக்காட்சி விஜய் டிவி. மக்களுக்கு பிடித்தமான நெடுந்தொடர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சில பழைய தொடர்கள் எப்பொழுது முடியும், எப்பொழுது முடிப்பீர்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர் பாவம் கணேசன். பலரது குரல்களிலும் பேசி மக்களிடம் பிரபலமான நவீன் இத்தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மக்கள் முதலில் இதனை விரும்பி பார்த்தாலும் சிறிது நாட்களிலேயே எப்பொழுது சீரியலை முடிப்பீர்கள்? என கேட்க தொடங்கிய நிலையில், சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
 - cini express.jpg)