ரசிகருடன் வீடியோ கால் பேசிய விஜய்..!!
Updated: May 11, 2022, 17:29 IST
`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜயின் 66வது படத்தை வம்சி இயக்குகிறார்.இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் யோகிபாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஜய் 66 முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படம் வெளியானது. அதில் விஜய் தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். இதை சம்பந்தப்பட்ட அந்த ரசிகர், புகைப்படமாக தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்க, அது சில நிமிடங்களில் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.
 - cini express.jpg)