விஜய் பட வில்லனுக்கு லண்டனில் திருமணம்..! யார் தெரியுமா ?
Jul 14, 2022, 13:20 IST

ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் தளபதி விஜயின் மிரட்டலான நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. அந்த படத்தில் கொடூர வில்லனாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் வித்யுத் ஜம்வால் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இதையடுத்து நடிகர் வித்யுத் ஜம்வால் ஹிந்தி சினிமாவில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு கடந்த வருடம் பிரபல பேஷன் டிசைனர் நந்திதா மஹ்தானி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஏற்கனவே விவாகரத்தான அவர் தற்போது வித்யுத் ஜம்வாலை காதலித்து மறுமணம் செய்யவுள்ளார் .இந்நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் மற்றும் நந்திதா இவர்களது திருமணம் இந்த மாதம் லண்டனில் மிக பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.