வைரல் வீடியோ..!! பயில்வான் ரங்கநாதனை பீச்சில் வெளுத்து வாங்கும் நடிகை ரேகா நாயர் ..!! 

 
1

சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாத வரம்பு மீறி பேசியிருந்தார். இந்தச் சூழலில், நேற்று காலை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் வாக்கிங் சென்ற ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை பார்த்து, “நான் என்ன உன் மனைவியா, குழந்தையா. எதற்காக அப்படி பேசுகிறாய். நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கு என்ன. தேவையில்லாமல் பேசக்கூடாது. சினிமாவில் நடிக்கும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி அதில் வரும் காசில் வாழக்கூடாது. வயதுக்குலாம் மரியாதை கொடுக்கமாட்டேன். அசிங்கமா பேசுனா செருப்பு பிஞ்சிடும்” என ஆவேசமகா பேசினார்.

இதனை எதிர்பார்க்காத பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் எதை எதையோ சொல்லி சமாளித்தார். பின்பு அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை வெளுத்துவாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

From Around the web