வைரலாகும் வீடியோ..!! பிரபல நடிகையை நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்து நடிகரின் மனைவி!!  

 
1

நடிகரும் பிண்ணனி பாடகருமான பாபுசன் மொகந்தி, கடந்த 2009-ம் ஆண்டு ஹர பட்நாயக் இயக்கத்தில் வெளியான ரேமியோ தி லவ்வர் பாய் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் த்ருபதி என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Babushan

பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா. அண்மையில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுசன் மொகந்தியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் இவரும், நடிகர் பாபுசன் மொகந்தியும் காரில் புபனேஷ்வர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தக்காரை வழிமறித்த பாபுசன் மொகந்தியின் மனைவி த்ருபதி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி காருக்குள் இருந்த பிரக்ருதி மிஸ்ராவை வெளியே இழுத்து தாக்கினார். 

அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை த்ருபதி இழுக்க முயற்சி செய்தார். ஆனால், அவரது பிடியில் இருந்து தப்பித்து, அருகில் நின்றிருந்த ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் பிரக்ருதி மிஸ்ரா ஏற முயன்றார். 

அப்போதும் விடாமல் துரத்திய த்ருபதி, அவரை அங்கிருந்து விரட்டினார். அப்போது த்ருபதி, 'என் குடும்பத்தை பிரக்ருதி மிஸ்ரா அழித்துவிட்டார்' என்று கத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் காரவேலா நகர் காவல் நிலையத்தில், பிரக்ருதி மிஸ்ராவின் தாய் கிருஷ்ணப்பிரியா மிஸ்ரா, தனது மகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக த்ருபதி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக, புவனேஸ்வர் போலீஸ் டிசிபி பிரதீக் சிங் கூறினார்.

From Around the web