சொன்ன தேதிக்கு முன்னரே வெளியாகும் ‘விருமன்’ !

 
1

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கிராம பின்னணியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

1

இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் பிரின்ஸ் மற்றும் பிசாசு 2 உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் வெளியாகிறது 

From Around the web