விஷால் பட நடிகர் ராமராஜ் காலமானார்! திரையுலகினர் இரங்கல்..!! 
 

 
1

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதன்பின் சினிமாவில் நடிக்க வந்த அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72. 

அவரது உடல், சொந்த ஊரான மேல் சாக்குளத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramaraj

அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web