தன்னை விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக விஷால் பட நடிகை பரபரப்பு புகார்..!! 

 
1

கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை தனுஸ்ரீ.இந்த படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.  ஆனாலும் தமிழில் அடுத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான அவர், முன்னணி திரைப்பிரபலங்கள்  மீது மீடூ புகார் கொடுத்து பாலிவுட்டையே அதிர வைத்தார். 

dhanu sree dutta

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தனுஸ்ரீ, தன்னை கொல்ல முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் தனது காரின் பிரேக் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும் அதனால் பெரும் விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார். அதேபோன்று என்னை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாகவும் பகீர் புகார் ஒன்றையும் கூறியுள்ளார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web