சமுக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய விஷ்ணு விஷால்..!! 

 
1

“வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் குள்ளநரி கூட்டம், நீர் பறவை, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று தந்தது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்.ஐ ஆர். திரை படம் பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியது.ஆனால் படம் நல்ல வசூல் செய்து விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் , சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பாா்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ” ஓய்வு என்பது ஒவ்வோரு மனிதருக்கும் அவசியம் . ஆகையால் நான் தனது சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன், மிக விரைவில் தந்திப்போம் ” என்று கூறியுள்ளார். 

விஷ்ணு விஷால் முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 

From Around the web