பொறுங்க இன்னும் 10 நிமிஷத்துல போலீஸ் வந்திடும்..!! துப்பாக்கியுடன் மிரட்டும் ராமராஜன் படத்தின் டீஸர் வெளியானது..!!  

 
1

தமிழ் சினிமாவில் 90-களில் முக்கியமான நடிகராக இருந்தவர் ராமராஜன். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போதே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சில காலம் மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் புதிய படம் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ‘சாமானியன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. 

 ராமராஜனின் 45வது படமாக உருவாகும் இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராமராஜன் துப்பாக்கியுடன் மிரட்டும் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web