2023 பொங்கலுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கு..!!

 
1

தெலுங்கில் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நாயகன் அகில் ஒரு உளவாளியாக நடிக்கிறார். படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்று கொண்டிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் அகிலின் காதலியாக சாக்‌ஷி வைத்யா என்பவர் நடித்துள்ளார். மேலும் நடிகர் மம்முட்டி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாது இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி ஏஜென்ட் 2023 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


 

From Around the web