வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு திடீர் மரணம்!! திரையுலகினர் அதிர்ச்சி!

 
1

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர். சுனில் பாபு. இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் பணியாற்றிய நம்பிக்கைக்குரிய கலை இயக்குநராக இருந்தார். மைசூர் கலைக் கல்லூரியில் படிப்பை முடித்த சுனில் பாபு, பிரபல புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலின் உதவியாளராக மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.

Sunil babu

'ஆனந்தபத்ரம்', 'பெங்களூர் டேஸ்', 'காயம்குளம் கொச்சுன்னி', 'பழசிராஜா', 'உருமி', 'சோட்டா மும்பை', 'ஆமி', 'பிரேமம்', 'நோட்புக்' போன்ற பல வெற்றி மலையாளத் திரைப்படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றினார். '. 'ஆனந்தபத்ரம்' படத்திற்காக சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.

'எம்எஸ் தோனி', 'கஜினி', 'லக்ஷ்யா', 'ஸ்பெஷல் 26' ஆகிய பாலிவுட் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அவரது சமீபத்திய படைப்பு விஜய்யின் வரவிருக்கும் படம் ‘வாரிசு’. கடந்த 3 நாட்களுக்கு முன் சுனில் பாபு காலில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

RIP

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுனில் பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஆர்யா சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

From Around the web