வெறும் 3 நாட்களில் 200,00,000 நிமிடங்கள் பார்த்து ஓடிடியில் வெறித்தனமான சாதனை..!!

 
1

ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘வீட்ல விசேஷம்’. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர். பாலிவுட் சூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது. திருமண வயதில் மகன் இருக்கும்போது அம்மா கர்ப்பமாகிறார். இதையடுத்து நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. காமெடி உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. 

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் சத்யராஜ் மற்றும் ஊர்வசி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மறைந்த மலையாள நடிகை கேபிஏசி லலிதா, யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1

இப்படம் ஜீ5 ஓடிடித்தளத்தில் கடந்த 15-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் வெளியான மூன்று நாட்களில் இப்படத்தை 2 கோடி நிமிடங்கள் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

From Around the web