லவ் தேடி எங்கே எங்கேயோ அலைஞ்சிகிட்டு இருக்கோம் ஆனா.... ‘கொஞ்சி பேசினால் என்ன’ டீசர் வெளியீடு !

 
1

கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘கொஞ்சம் பேசினால் என்ன’. இந்த படத்தை கிரி மூர்ப்பி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வினோத் கிஷன் கதாநாயகனாகவும், கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

‘முதல் நீ.. முடிவும் நீ’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் சார்பில் அமீர் பரத் இப்படத்தை தயாரித்து வருகிறார். தீபன் சக்ரவர்த்தி இசையில் உருவாகும் இப்படத்திற்கு லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அழகான காதல் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

From Around the web