இந்த கேஸ் ஜெயிக்கும்னு உறுதியா சொல்ல முடியாது - ஷ்ரத்தா ஸ்ரீநாத்  நடித்த விட்னஸ் படத்தின் ட்ரைலர் வெளியானது ..!! 

 
1

இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று மனித கழிவுகளை இன்னும் மனிதர்களே தங்கள் கைகளால் அகற்றிக் கொண்டிருப்பது தான். மேலும் கழிவு அகற்றும் குழிக்குள் சென்று தங்கள் உயிரை பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் கூட இந்த இழிவு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இந்தக் கதைக்களத்தை அடிப்படையாக வைத்து புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரோகினி இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் தீபக் இந்தப் படத்தை இயக்குகிறார். People Media Factory நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். படத்திற்கு விட்னஸ் (Witness) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நம்முள் பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது 

From Around the web