என்ன..!! ரௌடி பேபி திடீரென திருமணம் செய்துக்கொண்டாரா ?.. அவரே கொடுத்த விளக்கம் !

 
1

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ஆயிஷா. ரௌடி பேபி என அனைவராலும் அறியப்பட்ட ஆயிஷா  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சத்யா’ சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டினார். 

சமீபத்தில் சத்யா சீரியலில் முதல் சீசன் நிறைவுபெற்ற நிலையில் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. நடிகை ஆயிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

ayesha

அதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அந்த வகையில்  அழகாக புடவை காட்டி நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஆயிஷாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளித்த ஆயிஷா, எனக்கு திருமணம் நடைபெறவில்லை. இது வெறும் போட்டோஷூட்தான் என்று தெரிவித்தார். ஆனால் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

From Around the web