என்ன..!! வாரிசு படத்தின் போஸ்டர் இந்த விளம்பரத்தை பார்த்து காப்பி அடித்ததா ? என்ன சொல்கிறது ஓட்டோ?

 
1

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்கள் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

படத்திற்கு ‘வாரிசு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சூட் ஆடையில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காணப்பட்டார். ஆனால் அது பார்ப்பதற்கு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரம் போல் இருப்பதாக, நடிகர் துல்கர் சல்மான் பிரபல ஆடை நிறுவனமான ஓட்டோ (OTTO) விளம்பரம் ஒன்றில் கோட் சூட் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை, 'வாரிசு' படத்தின் முதல் பார்வையுடன் ஒப்பிட்டு 'இரண்டும் ஒன்று போல இருக்கிறதே, இதை கூடவா படக்குழு காப்பி அடிக்கும்' என இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு இணையத்தில் அந்த புகைப்படத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பகிர்ந்து வந்தனர்.

1

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஓட்டோ நிறுவனமே இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.  ஓட்டோவில், ஒரிஜினல் உருவாக்கங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,  அதை எடுத்து இது போன்று தவறாக உபயோகிக்க வேண்டாம். ஏனெனில், துல்கர் சல்மானை வைத்து இப்படி வந்துள்ள விளம்பரம் பொய்யானது. ஏதோ ஒரு மீம் கிரியேட்டர், கேலிக்காக இப்படி ஒரு பொய்யான புகைப்படங்களை சித்தரித்துள்ளார். அதனால், யாரும் இதை நம்ப வேண்டாம். வாரிசு அணிக்கு எங்கள் தரப்பில் இருந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" என்று தெரிவித்துள்ளனர். 

1

From Around the web