என்னப்பா சொல்றீங்க..!! அட்லீ படம் விஜயகாந்த் படத்தின் காப்பியா..? 

 
1

இயக்குனர் அட்லீ, விஜயை வைத்து பிகில் திரைப்படத்தை எடுத்த பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1

விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு படத்தை எடுக்க மாணிக்கம் நாராயணன் என்பவர் நிதி உதவி செய்திருந்தார். ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மரணமடைந்துவிட்ட நிலையில், தற்போது பட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் உள்ளது.

இந்நிலையில் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் பேரரசு திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் மீதான விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web