என்னங்க சொல்றீங்க..!! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினாரா கோபி?  

 
1

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு தனது காதலி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட கோபி தற்போது குடும்பத்திலிருந்து பிரிந்துவிட்டார். வீட்டில் அனைவருமே அவரை வெறுத்து ஒதுக்கிய நிலையில், குடும்பத்தினரை வெறுப்பேற்றும் வகையில் ராதிகாவுடன் அருகிலேயே புது வீட்டுக்கு குடி வந்துவிட்டார். இந்நிலையில் தற்போது ராதிகாவுடன் நடிகர் சஞ்சீவ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதைப்பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் இனி சஞ்சீவ் தான் நடிக்கிறாரோ என குழப்பமடைந்தனர். பின்னர் அது ஒரு விளம்பர படத்திற்கான படப்பிடிப்பு என்றும், அதில் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்க, அவருடன் சஞ்சீவ் இணைந்து நடிப்பதாக தெரிய வந்திருக்கிறது.

From Around the web