என்னப்பா சொல்றீங்க..!! அச்சு அசல் யோகி பாபுவை போலிருக்கும் அவர் அண்ணன்!  

 
1

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யோகிபாபு.உருவகேலி செய்த அனைவருக்கும் சாட்டை அடியாய் அமைந்தது இவர் நயந்தாரவுடன் ஜோடிசேர்ந்து நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம். தொடர்ந்து யோகிபாபு பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவையில் அசத்தி வரும் இவர்,  சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவிற்கு மொத்தம் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதிரி இருகிறார்கள். இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் யோகி ராஜா இவர் தற்போது ஆரணியில் வசித்து வருகிறார்.

யோகி ராஜா திருமணம் செய்து கொள்ளாமல் சாமியாராக மாறிவிட்டாராம். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரை பார்க்கும் போது அச்சு அசல் யோகி பாபு போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் 

1
 

From Around the web