என்னப்பா சொல்றீங்க..!! விஜய் படத்தை தயாரிக்கிறாரா ‘தல’ தோனி..? 

 
1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி சினிமா பக்கம் திரும்பியுள்ளார். அதன்படி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழி திரைப்படங்களை தயாரிக்க உள்ளார்.

Vijay-dhoni

இந்த நிறுவனம் சார்பாக ‘ரோர் ஆஃ தி லயன்’, ‘ப்ளேஸ் டு குளோரி’ மற்றும் ‘தி ஹிடன் ஹிந்து’ ஆகிய மூன்று படங்களை தயாரித்துள்ளார். ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட் படங்கள் தான்.

தோனியின் ராசியான நம்பர் 7 என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் தனது ப்ரடெக்ஷன் அலுவலகத்தை திறக்க தோனியின் டீம் மும்முரமாக வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni

இதுகுறித்து விஜய்யுடன் தோனி பேசியுள்ளதாகவும், விஜய்யும் தோனியின் தயாரிப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களை முடித்த பிறகு சேர்ந்து பணியாற்றலாம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் தோனி டீம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பின் படத்தையும் மலையாளத்தில் பிரித்விராஜின் படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

From Around the web