என்னப்பா சொல்றீங்க குக் வித் கோமாளி சிவாங்கியா இப்படி ? 

 
1

குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சிலர் வரவேற்பை பெற்றனர். அதில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.அதேபோன்று சிவாங்கியும் வெள்ளித்திரையில் நுழைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவாங்கியின் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு யூடியூப் சேனல் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூறியிருந்தது, சிவாங்கி பாடகர் என்பதை தாண்டி தற்போது நடிகையாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் டான் படத்திலும் நடித்திருந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்பு வருகிறது.

இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  அது மட்டும் இல்லாமல் புது இயக்குனர் ஒருவருடைய படத்தில் சிவாங்கி கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்திற்கான மேக்கப் ஆர்டிஸ்ட், டிரஸ் எல்லாம் இவங்களே எடுத்துக் கொண்டு போயிட்டு ஒரு நாளைக்கு 14,000 ரூபாய் பில் தருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இன்னொரு இயக்குனர் படத்தில் காஸ்டியூம் டிரஸ் எல்லாம் காண்பித்து நடிக்க சொன்னதுக்கு இவ்வளவு விலை குறைவான துணியெல்லாம் போட முடியாது. எனக்கு குறைந்த பட்சம் 5,000 ரூபாய் மதிப்புள்ள துணியாவது வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லி சென்றுவிட்டார். இதனால் அந்த ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு பல நடிகர்கள் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளரும்போது இப்படி செய்வது மிகவும் தவறு. அவர் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது என்று கிண்டல் கேலி செய்து பேசி இருக்கிறார்கள்.

 

From Around the web