ஒரு பொண்ண கண்டுபுடிக்கணும் என்ன ஆனா... எங்க போனா தெரியல... வேற லெவலில் மிரட்டும் யூகி படத்தின் டிரெய்லர்..!!  

 
1

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வரும் இளம் நடிகர் கதிர், பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அதே நேரத்தில் செகண்ட் ஹீரோவாக விக்ரம் வேதா, பிகில் போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், கதிர் நடிப்பில் தயாராகியுள்ள யூகி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதிருடன் நரேன் மற்றும் நட்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராகி வரும் நிலையில், இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார்.

இதில் கதிருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ள நிலையில். குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி, நடிகை ஆத்மியா, வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

From Around the web